உணவு சேவைக்கும் பட்ஜெட் போடுங்கள்

தினமலர்  தினமலர்
உணவு சேவைக்கும் பட்ஜெட் போடுங்கள்

ஆன்­லை­னில் உணவு ஆர்­டர் செய்­யும் சேவை­களை பயன்­ப­டுத்­தும் வழக்­கம் அதி­க­ரித்து வரும் நிலை­யில், இத­னால், மாதாந்­திர பட்­ஜெட்­டில் பாதிப்பு ஏற்­பட வாய்ப்­பி­ருப்­பதை உணர்ந்து செயல்­பட வேண்­டும்.

ஆன்­லை­னில் உணவை ஆர்­டர் செய்­யும் பலனை உணர்ந்த பல­ரும், இந்த வச­தியை தொடர்ந்து பயன்­ப­டுத்­து­கின்­ற­னர். அதி­லும் உணவு பிரி­யர்­கள், வாரந்­தோ­றும் அல்­லது அடிக்­கடி, புதிய உணவு வகை மற்­றும் புதிய ரெஸ்­டா­ரன்ட்­களை முயன்று பார்க்கின்றனர்.இதன் கார­ண­மாக, உண­வுக்கு என்று ஒரு­வர் செல­விட நினைப்­ப­தை­விட, அதிக தொகை மாதந்­தோ­றும் செல­வி­டும் நிலை ஏற்­ப­ட­லாம். இது, பட்­ஜெட்­டை­யும், சேமிப்­பை­யும் பதம் பார்க்­க­லாம்.

உண­வுக்­கான தொகை தவிர, ஆன்­லைன் ஆர்­ட­ருக்­கான கட்­ட­ண­மும் செலுத்த வேண்­டும். இது சிறிய தொகை என நினைத்­தா­லும், தொடர்ந்து பயன்­ப­டுத்­தும்­போது, இந்த தொகை கணி­ச­மா­ன­தாக இருக்­க­லாம்.

எனி­னும், ஆன்­லை­னில் ஆர்­டர் செய்­வதை, குடும்­பத்­து­டன் வெளியே சென்று சாப்­பி­டு­வது போன்­றது என்­றும், பலர் நினைக்­க­லாம். ஆனால், வெளியே சென்று உணவு சாப்­பிட என்று ஒரு தொகையை பட்­ஜெட்­டில் ஒதுக்­கு­வதே சரி­யாக இருக்­கும்.

அது போலவே, ஆன்­லை­னில் உண­வுக்­காக செல­வி­டும் தொகையை கணக்­கிட்டு, அதற்­கென முன்­கூட்­டியே ஒரு பட்­ஜெட்டை உரு­வாக்கி கொள்­வது பய­னுள்­ள­தாக இருக்­கும்.

மூலக்கதை