அபுதாபி நீதிமன்றத்தில் அலுவல் மொழியானது ஹிந்தி

தினமலர்  தினமலர்
அபுதாபி நீதிமன்றத்தில் அலுவல் மொழியானது ஹிந்தி

துபாய்: அபுதாபி நீதிமன்ற அலுவல் மொழியாக, அரபு, ஆங்கிலத்திற்கு அடுத்து 3வது மொழியாக ஹிந்தி சேர்க்கப்பட்டுள்ளது.

யு.ஏ.இ., மக்கள் தொகையில் 30 சதவீதத்தினர் இந்தியர்கள். சுமார் 26 லட்சம் இந்தியர்கள் அங்கு பணிபுரிந்து வருகின்றனர். அந்நாட்டிலுள்ள அபுதாபி நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக அரபு, ஆங்கிலம் உள்ளன. இந்நிலையில் 3வது அலுவல் மொழியாக, தற்போது ஹிந்தியும் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள அபுதாபி நீதித்துறை, யு.ஏ.இ.,யில் அதிகம் வசித்து வரும் ஹிந்தி பேசும் மக்கள், வழக்கு குறித்த விவரங்களை பெறுவதற்கு மொழி தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக ஹிந்தி அலுவல் மொழியாக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மூலக்கதை