கார் ஓட்டி விபத்து:டிரைவிங் லைசென்சை சரண்டர் செய்த இளவரசர்

தினமலர்  தினமலர்
கார் ஓட்டி விபத்து:டிரைவிங் லைசென்சை சரண்டர் செய்த இளவரசர்

லண்டன்: கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியமைக்காக தனது டிரைவிங் லைசென்சை சரண்டர் செய்தார் 97 வயது இங்கிலாந்து இளவரசர் பிலிப்.

கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்தில் இரண்டாம் எலிசபெத் ராணிக்குச் சொந்தமான சந்திரிங்கம் கார்டலிருந்து இளவரசர் பிலிப்,97 , லேண்ட்ரோவர் காரி்ல் வேகமாக வெளியே வந்தார். அப்போது இவரது கார் மற்றொரு காருடன் பக்கவாட்டில் மோதி விபத்திற்குள்ளானது. இளவரசர் காயமின்றி உயிர்தப்பியபோதும், மற்றொரு காரை ஓட்டி வந்த பெண்ணின் கை மற்றும் கால்களில் காயமானது. பெண்ணிடம் மன்னிப்பு கோரினார் பிலிப்.இந்நிலையில் நேற்று தனது டிரைவிங் லைசென்சை போலீஸ் ஸ்டேசனில் சரண்டர் செய்ததாக பக்கிம்ஹாம் அரண்மணை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை