ரயில்கள் நேருக்கு நேர் மோதல் ஒருவர் பலி; 90 பேர் காயம்

தினமலர்  தினமலர்
ரயில்கள் நேருக்கு நேர் மோதல் ஒருவர் பலி; 90 பேர் காயம்

மாட்ரிட்:ஸ்பெயினில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலியானர். பலர் காயமடைந்தனர்.ஸ்பெயினின் கிழக்குப் பகுதியில் உள்ள மான்ரேசா சான்ட் வென்சென்க் பகுதியில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் ஒருவர் பலியானார். 90க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.சிக்னல் கருவியில் ஏற்பட்ட கோளாறால் ரயில்கள் தடம் மாறி வந்ததால் விபத்து ஏற்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் இதே ரயில் தடத்தில் ஏற்பட்ட விபத்தில் 50 பேர் காயமடைந்தனர்.

மூலக்கதை