ஹனோய் நகரில் டிரம்ப், கிம் பேச்சுவார்த்தை

தினமலர்  தினமலர்
ஹனோய் நகரில் டிரம்ப், கிம் பேச்சுவார்த்தை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் இருவரும் வியட்நாமில் ஹனோய் நகரில் சந்தித்த பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கஅதிபர் டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் இருவரும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் உச்சிமாநாடு நடத்தி முதல்முறையாக சந்தித்து பேசினர். இந்த பேச்சு வார்த்தையின்போது கொரிய தீபகற்ப பகுதியை அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற ஒப்புக்கொண்டனர். இதையொட்டி ஒரு உடன்பாடும் செய்து கொண்டனர். ஆனாலும் இதில் ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை என்ற


குற்றச்சாட்டுக்கு ஆளானபோதும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், டிரம்புடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தொடர்ந்து முயற்சி மேற்கொண்டார். அதை டிரம்ப் ஏற்றார். இந்த நிலையில் அதிபர் டிரம்ப், பிப். 27,29 தேதிகளில் கிம் ஜோங் உன்னை வியட்நாம் தலைநகர் ஹனோய் நகரில் சந்தித்து பேசுகிறேன் என்றார். இது குறித்து டிரம்ப் தனது டுவிட்டரில் கூறியது, “வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இது அமைதிக்கான நடவடிக்கையை முன்னெடுத்து செல்லும்” என்றார்.

மூலக்கதை