பிரித்தானியாவில் நான்கு குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த பரிதாபம்!

PARIS TAMIL  PARIS TAMIL
பிரித்தானியாவில் நான்கு குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த பரிதாபம்!

பிரித்தானியா ஸ்டாஃபோர்ட்ஷயர் பகுதியில் வீடொன்று தீக்கிரையான நிலையில் 4 சிறார்கள் உயிரிழந்தனர்.
 
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒரு ஆணும், பெண்ணும் நேற்று (வௌ்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
முழு கவனக் குறைவு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று சந்தேகிக்கும் பொலிஸார் 28 வயதான ஆணையும், 24 வயதான பெண்ணையும் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
 
3, 4, 6 மற்றும் 8 வயதுகளை உடைய 4 சிறார்கள் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தீவிபத்தில் உயிரிழந்னர்.
 
விபத்து இடம்பெற்ற தருணத்தில் சிறார்களின் தாயான 24 வயதான பெண் மற்றும் அவரது 28 வயதான முன்னாள் துணைவர் மற்றும் 2 வயதான சிறுவன் ஒருவனுடன் முதலாம் மாடியில் இருந்து ஜன்னல் வழியாக வௌியே குதித்துள்ளனர். எனினும் அவர்கள் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

மூலக்கதை