தலையில்லாமல் நிர்வாணமாக மிதந்து வந்து அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆண்களின் சடலம்!

PARIS TAMIL  PARIS TAMIL
தலையில்லாமல் நிர்வாணமாக மிதந்து வந்து அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆண்களின் சடலம்!

தாய்லாந்தில் நிர்வாணமாக இரண்டு ஆண்களின் உடல்கள் தலை இல்லாமல் கடலில் மிதந்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தாய்லாந்தின் Pattaya பகுதியிலிருந்து சுமார் 40 கி.மீற்றர் தொலைவிலிருக்கும் கடற்கரைகளில் நிர்வாணமாக தலை மட்டும் இல்லாமல், இரண்டு நபர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
அதில் ஒரு நபரின் உடல் Mae Rumbpueang கடற்கரையில் மிதந்து வந்துள்ளது. இந்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் அந்த நபரின் உடலை மீட்டுள்ளனர்.
 
அப்போது அந்த நபர் இறந்து ஒரு வாரம் ஆகியிருக்கலாம் எனவும், உடலில் மூன்று முக்கிய பகுதிகளில் ஆங்கிலத்தில் பச்சை குத்தப்பட்டுள்ளதாக பொலிசார் கூறினார்.
 
இந்த சம்பவம் முடிவதற்குள் PMY கடற்கரையில் இதே போன்று நபர் ஒருவரின் உடல் நிர்வாண நிலையில் தண்ணீரில் மிதந்து வந்துள்ளது.
 
அங்கு சென்று பொலிசார் பார்த்த போது, அந்த நபரும் தலையில்லாமல் தான் இருந்துள்ளார் எனவும், இந்த நபர் இறந்து 10 நாட்கள் ஆகியிருக்கலாம் என்று பொலிசார் கூறியுள்ளனர்.
 
மேலும் சமீபத்தில் பாங்காங்கிலிருந்து சுமார் 20 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள Phra Pradaeng பகுதியில் மீனவர் ஒருவர் பெண் ஒருவரின் தலையை கண்டு அதிர்ச்சியடைந்து, அது குறித்து காவல்நிலையத்திற்கு தெரிவித்திருந்தார்.
 
பொலிசார் அந்த பெண்ணின் தலையை உடனடியாக பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருந்தனர். இந்த பெண்ணின் தலை தனியாக கிடைத்ததற்கும், இப்போது ஆண்களின் இரண்டு உடல்கள் நிர்வாண நிலையில் மீட்கப்பட்டிருப்பதும் பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுள்ளது.
 
அந்த பெண்ணின் கொலைக்கும், இந்த நபர்களின் கொலைக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்று பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
அதே சமயம் தொடர்ந்து இது போன்று கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உடல்கள் மிதந்து வருவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் இருப்பதாக அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 

மூலக்கதை