‘சினிமாவை பார்ப்பது போல் டி20ஐ பார்க்கின்றனர்’ உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் எதற்கு?: ஐசிசி சேர்மன் ஷசாங்க் மனோகர் விளக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘சினிமாவை பார்ப்பது போல் டி20ஐ பார்க்கின்றனர்’ உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் எதற்கு?: ஐசிசி சேர்மன் ஷசாங்க் மனோகர் விளக்கம்

டாக்கா: ‘சினிமா பார்ப்பது போல் டி20 போட்டியை ரசிகர்கள் பார்ப்பதால், டெஸ்ட் போட்டிக்கு பதிலாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படும்’ ஐசிசி சேர்மன் ஷசாங்க் மனோகர் விளக்கம் அளித்துள்ளார். டி20 கிரிக்கெட் தொடங்கப்பட்டதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான ஆர்வம் ரசிகர்களிடையே குறைந்து, மைதானமே வெறிச்சோடி கிடக்கிறது. ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா போன்ற பலமான அணிகள்,  மற்ற அணிகளுடன் டெஸ்ட் தொடர் நடத்த ஆர்வம் காட்டுவதில்லை.

இதனால், டெஸ்ட் போட்டி அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளது. டெஸ்ட் போட்டி நடத்தப்படாததால், வீரர்களின் திறனை அறிய முடியாத சூழல்  ஏற்பட்டிருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இதனை தவிர்க்க ஐசிசி நிர்வாகம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை அறிமுகப்படுத்த இருக்கிறது.

இதுகுறித்து, ஐசிசி சேர்மன் ஷசாங்க் மனோகர் கூறியதாவது:டெஸ்ட் கிரிக்கெட் அழிந்து கொண்டு வருவதால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை தொடங்கியுள்ளோம். இது, டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு உயிர்கொடுக்கும்.

வீரர்களின் திறனை வெளிப்படுத்த வாய்ப்பாக அமையும். டி20 கிரிக்கெட்  போட்டி குறுகிய நேரத்திற்குள் முடிந்துவிடும்.

தற்போது ரசிகர்கள் 5 நாட்கள் மைதானத்திற்கு வந்து போட்டியை பார்ப்பதில்லை. டி20 போட்டியை ஒரு சினிமாவை பார்ப்பதுபோல் பார்த்துவிடுவார்கள்.

போட்டியும் மிகவும் பரபரப்பாக  வேகமாகச் செல்வதால், ரசிகர்கள் அதற்குத்தான் வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை