பெடரேஷன் கோப்பை டென்னிஸ் கஜகஸ்தான் அணி அபாரம்: இன்று கொரியாவுடன் மோதும் இந்தியா

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெடரேஷன் கோப்பை டென்னிஸ் கஜகஸ்தான் அணி அபாரம்: இன்று கொரியாவுடன் மோதும் இந்தியா

அஸ்டானா: பெடரேஷன் கோப்பை டென்னிஸ் போட்டியில், இந்திய அணியினர் கஜகஸ்தானிடம் 3-0 என்ற ஆட்டக் கணக்கில் தோல்வியுற்றனர். பல்வேறு நாடுகளின் மகளிர் டென்னிஸ் அணிகளுக்கு, பெடரேஷன் கோப்பை போட்டி நடத்தப்படுகிறது.

அஸ்டானாவில் நடந்த முதல் ஆட்டத்தில் தாய்லாந்தை 2-1 என்ற ஆட்டக்கணக்கில் வென்றிருந்தது இந்தியா.

தொடர்ந்து  கஜகஸ்தான் அணியுடன் இந்தியா மோதியது.

இதில், இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னாவை 6-1, 7-6 என்ற நேர் செட்களில் யுலியா புலின்ட்செவா வென்றார். மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் கர்மன் கவுரை 6-3, 6-2 என  ஜரீனா டியாஸ் வீழ்த்தினார்.

இரட்டையர் பிரிவில் ரியா பாட்டியா - பிரார்த்தனா தோம்ரே இணையை 6-1, 6-1 என்ற செட் கணக்கில் அன்னா-கலினா இணை வென்றது. இறுதியில் 3-0 என கஜகஸ்தான் வென்றது.

இந்திய  அணியினர், கொரியாவுடன் இன்று மோதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை