சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் குடியேறும் வெளிநாட்டினரை வரவேற்கிறேன்- அதிபர் டிரம்ப்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் குடியேறும் வெளிநாட்டினரை வரவேற்கிறேன் என அதிபர் டிரம்ப் பேசினார்.

அமெரிக்க பாராளுமன்ற மரபுகளின்படி ஆண்டுதோறும் அந்நாட்டு பாராளுமன்றத்தின் காங்கிரஸ் மற்றும் செனட் சபைகளின் கூட்டுக்கூட்டத்தில் அமெரிக்க அதிபர்கள் பேசுவது வழக்கம். 

ஆனால் மெக்சிகோ எல்லையில் மதில் சுவர் கட்டுவதற்கு நிதி ஒதுக்க எம்.பி.க்கள் அனுமதி அளிக்காததால் இந்த ஆண்டின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்ற மாட்டேன் என அதிபர் டிரம்ப் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சுமூகநிலை திரும்பியுள்ளதால் காங்கிரஸ் மற்றும் செனட் சபைகளின் கூட்டுக்கூட்டத்தில் அதிபர் டிரம்ப் பங்கேற்றுப் பேசினார். அப்போது பழிவாங்கும் அரசியலை ஒதுக்க வேண்டும் என எம்பி.,க்களிடம் கேட்டுக் கொண்டார். 

சட்டவிரோத குடியேற்றம், கொடூர தாக்குதல்கள், போதைப் பொருள் விற்பனை, மனித கடத்தல்கள் ஆகியவை அமெரிக்காவில் முடிவுக்கு வந்துள்ளது என்பதை உலகிற்கு காட்ட வேண்டிய நேரம் இது. 

கடந்த காலங்களில் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப வேண்டும் என்ற முடிவுக்கு ஆதரவாக இந்த சபையில் பெரும்பாலானவர்கள் ஓட்டளித்தனர். எனினும் இதுவரை முறையான சுவர் கட்டப்படவில்லை, ஆனால் நான் அதை கட்டுவேன். 

சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் குடியேறும் வெளிநாட்டினரை நான் வரவேற்கிறேன். நமது நாட்டின் வளர்ச்சிக்கும், சமூகத்தின் வளர்ச்சிக்கும் பல்வேறு வகைகளில் அவர்கள் உதவிகரமாக இருந்து வருகின்றனர்.

நமது நாட்டு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படாத ஒரு குடியுரிமைத்துறை கொள்கையை நாம் வகுத்தாக வேண்டும்.

சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் குடியேறிய பல லட்சக்கணக்கான பேரையும் சேர்த்துத்தான் நான் நமது நாட்டு மக்கள் என்று குறிப்பிடுகிறேன் என்று கூறி உள்ளார். 

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் உடனான எனது உறவு நன்றாக உள்ளதால் பல பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்., 27, 28 ம் தேதிகளில் வியட்நாமில் மீண்டும் சந்திப்பு நடைபெற உள்ளது. 

இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை