காற்று மாசு உடனடியாக அறிய மேலும் கருவிகள், நிலையங்கள் அமைக்க மத்திய அரசு முடிவு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

காற்று மாசு அதிகரித்து வருவதால், அதை உடனடியாக கண்டறிய மேலும் 300 கருவிகளையும், நிலையங்களையும் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. 

நாடு முழுவதும் பல்வேறு  நகரங்களில் காற்றின் தரம் வேகமாக பாதிக்கப்பட்டு, மாசு அதிகரித்து வருகிறது.எனவே, காற்றின் தரத்தை உடனுக்குடன் கண்டுபிடித்து தெரிவிக்கும் 150 நவீன கருவிகளை நாட்டின் பல்வேறு நகரங்களில் மத்திய அரசு  அமைத்து உள்ளது. 

மேலும், 731 மாசு கண்டறியும் மையங்களும் 70 நகரங்களில் நிறுவப்பட்டு உள்ளன. தலைநகர் டெல்லியில் மட்டும் 48 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 

இந்த நிலையில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக துணை செயலாளர் சத்யேந்திர குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

 ‘‘நாடு முழுவதும் உடனடியாக  மாசு தரத்தை கண்டறிய மேலும் 300 கருவிகளை அமைக்க அரசு திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் மூலம், இந்த கருவிகளின் எண்ணிக்கை 450 ஆக உயரும், இது தவிர, மாசுவை அளவிடும் மையங்களின் எண்ணிக்கையையும் 1,500 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.’’ 

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை