வாட்சப், மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் செயலிகளை ஒருங்கிணைக்க பேஸ்புக் நிறுவனம் திட்டம்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
வாட்சப், மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் செயலிகளை ஒருங்கிணைக்க பேஸ்புக் நிறுவனம் திட்டம்!

வாட்சப், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்று செயலிகளையும் ஒன்றிணைக்க பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

இவ்வாறு செய்யும் போது வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தும் நபருடன் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும். வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் செயலிகள் தனித்தனியே இயங்கினாலும், இதன் உள்கட்டமைப்பு கொண்டு வாடிக்கையாளர்கள் மற்ற செயலிகளை பயன்படுத்துபவர்கள் உடன் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மேலும் மூன்று செயலிகளுக்கு இடையே நடைபெறும் தகவல் பரிமாற்றம் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. செயலிகளை ஒன்றிணைப்பதன் மூலம் விளம்பர வருவாய் அதிகரிக்கும்.

பேஸ்புக் நிறுவனம் இதற்கான ஒப்புதலை இதுவரை வழங்கவில்லை. இதன்மூலம் ஆப்பிள் ஐ-மெசேஜ், கூகிளின் மெசேஜிங் சேவைகளுக்கு கடும் நெருக்கடி கொடுக்க பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

இந்த சேவையானது இந்த வருடம் இறுதியில் அல்லது 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை