‘தமிழ் மொழி, பண்பாட்டுத் திங்கள்’ - வடகரோலினா மாநிலத்தின் மாண்புமிகு ஆளுநர் இராய் கூப்பர் அறிவிப்பு

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
‘தமிழ் மொழி, பண்பாட்டுத் திங்கள்’  வடகரோலினா மாநிலத்தின் மாண்புமிகு ஆளுநர் இராய் கூப்பர் அறிவிப்பு

வடகரோலினா மாநிலத்தின் மாண்புமிகு ஆளுர் இராய் கூப்பர் (ஆளுநர் மக்களால் நேரடியாகத்தேர்ந்தெடுக்கப்படுபவராவார்அவர்கள் தமிழின் தொன்மையையும்பண்பாட்டு வளத்தையும் பாராட்டித்தைத்திங்களை வடகரோலினாவின் தமிழ் மொழிபண்பாட்டுத் திங்கள்’ என்று அரசுப் பொதுஅறிவிப்பு விடுத்துள்ளார்அதற்கான ஆவணப் பட்டயத்தையும்அதனை அவர் அறிவித்து வெளியிடும் நிகழ்படத்தையும் தமிழர்களிடம் வழங்கியுள்ளார்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக வடகரோலினா மாநிலத்தில் வாழ்ந்து வரும் தமிழர்கள்கரோலினாதமிழ்ச்சங்கத்தை நிறுவி அதன் மூலம் தமிழரின் மொழியையும்பண்பாட்டையும் பேணிப் பாதுகாத்துவருகின்றார்கள்தமிழ்ப்பள்ளி நிறுவி அதன் மூலம் தம் எதிர்காலத் தலைமுறையினர்க்கும்தமிழ் மொழி கற்கும்ஆர்வமுடைய அயல் இனத்தவர்களுக்கும் தமிழ் மொழி கற்பிப்பதைப் பெரும் தொண்டாகச் செய்துவருகின்றார்கள்தமிழ்ப்பள்ளியில் இப்பொழுது ஐநூற்றுக்கும் மேற்பட்ட மாணாக்கர் தமிழை ஆர்வமுடன் கற்றுவருகின்றார்கள்.


அத்துடன் தமிழர்கள் வடகரோலினா மாநிலத்தின் முன்னேற்றத்திலும் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகின்றார்கள்.இம்மாநிலத்தில் இயற்கைப் பேரிடர்கள் வரும்போதெல்லாம் அரசுடன் இணைந்துப் பல நற்பணிகளைச் செய்துவருகின்றார்கள். பல்வேறு துறைகளில் முதலீடு செய்து மாநிலத்தின் பொருளாதாரத்தையும்முன்னேற்றுகின்றார்கள்.

உழவுத் தொழிலைச் சிறப்பிக்கும் வகையில் தமிழர்கள் மரபு வழியாகத் தைத்திங்களை அறுவடைத்திருநாளாகவும்தமிழர் திருநாளாகவும் தைப்பொங்கலிட்டுக் கொண்டாடி வருகின்றார்கள்பல்லாயிரக்கணக்கானஆண்டுகளாகச் செழிப்புடனும் இளமையுடனும் திகழும் தமிழரின் மொழியும் பண்பாடும்வடகரோலினா மாநிலஆளுனரால் ஏற்பிசைவு பெற்றுள்ளது. அவர் தமிழைச் சிறப்பித்துத் தாமும் தமிழரின் வரலாற்றில்சிறப்பெய்தியுள்ளார்தமிழரின் புத்தாண்டு தைத் திங்களின் முதல் நாளில் தொடங்குவதையும், வடகரோலினாவில்வாழும் தமிழர்கள் இம்மாநிலத்தின் குமுகபொருளாதாரபண்பாட்டுத் தளங்களில் நன்முறையில் தாக்கத்தைஏற்படுத்தியுள்ளதாகவும்தமிழ் இந்நாட்டின் பண்பாட்டுப் பன்மைக்கும் தொன்மைக்கும் பங்களித்திருப்பதாகவும்,தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் உலகின் மிகப்பழைமையான மொழிகளுள் தமிழும் ஒன்று என்றும்மனமுவந்து பாராட்டியுள்ளார்.

தமிழ் மொழிபண்பாட்டுத் திங்கள் என்று சனவரியை வடகரோலினா அரசு அறிவித்திருப்பது உலகெங்கும்வாழும் தமிழர்கள் அனைவர்க்கும் பெரும் மகிழ்வளிக்கும் செய்தியாகும். வடகரோலினாவில் வாழும் தமிழர்களின்நீண்டநாள் கனவுகளில் ஒன்று இந்த ஆண்டு நிறைவேறியுள்ளதுஉலகெங்கும் வாழும் தமிழர் அனைவர்க்கும்வரகரோலினா வாழ் தமிழர்களின் தமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் !   NC Governor's Declaration Video Link: https://www.youtube.com/watch?v=wj_vwxAlUl0

மூலக்கதை