ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் 720 கிலோ மீட்டர் தூரத்திற்கு தீ பரவும் வாய்ப்பு

தினகரன்  தினகரன்
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் 720 கிலோ மீட்டர் தூரத்திற்கு தீ பரவும் வாய்ப்பு

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் 720 கிலோ மீட்டர் தூரத்திற்கு தீ பரவும் வாய்ப்பு இருப்பதாக் கூறப்படுகிறது. டாஸ்மேனியா வனப்பகுதியில் உள்ள புதர் காடுகளில் திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகத்தில் வேகமாக நெருப்பு பரவியதால் சுமார் 55 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெருப்பு எரிந்து வருகிறது.நெருப்பை அணைக்க நியூ சவுத்வேல்ஸ் பகுதியில் இருந்து ஹெலிகாப்டர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தீயின் வேகம் அதிகமாக இருப்பதால் வரும் நாட்களில் 720 கிலோ மீட்டர் தூரம் பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். இதேபோல் கடந்த ஏப்ரல் மதாம் ஆஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் புற்கள் மூலம் பரவிய காட்டு தீயால் பெரும்பாலான பகுதி நாசமானது குறிப்பிடத்தக்கது. மேலும் தீ இந்த காட்டுத் தீ 2,200 ஏக்கர் நிலப்பரப்பை நாசம் செய்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை