ரயில்வேயில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 4 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு : பியூஸ் கோயல் தகவல்

தினகரன்  தினகரன்
ரயில்வேயில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 4 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு : பியூஸ் கோயல் தகவல்

புதுடெல்லி : ரயில்வேயில் புதிதாக இரண்டு லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க உள்ளதாக பியூஸ் கோயல் தகவல் அளித்துள்ளார். காலியாக உள்ள 2 லட்சத்து 82 ஆயிரம் இடங்கள் மற்றும் ஓய்வு பெறும் ஊழியர்கள் கணக்கின்படி மொத்தம் 4 லட்சம் பேர் 2021ம் ஆண்டில் ரயில்வேயில் பணி நியமனம் செய்யப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார். ரயில்வேயில் ஏற்கனவே 1 லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 2 லட்சத்து 30 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறியுள்ளார். இதில் 1 லட்சத்து 31 ஆயிரம் பணியிடங்களுக்கான அறிவிப்பு அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்பட்டும் என்றும், ஓராண்டுக்குள் பணிநியமனம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் 91 ஆயிரம் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு மே மாதம் வெளியிடப்படும் என்றும், இந்த பணியிடங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு 34 ஆயிரம் இடங்களும், பழங்குடியினருக்கு 17 ஆயிரம் இடங்களும், பிற்படுத்தப்பட்டோருக்கு 62 ஆயிரம் இடங்களும் ஒதுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கான 10 சதவிகித நடைமுறையின் கீழ் முதல் முறையாக 23 ஆயிரம் பணியிடங்கள் ஒதுக்கப்படும் என்று பியூஸ் கோயல் தெரிவித்தார். அடுத்தடுத்து ரயில்வேயில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் சுமார் 4 லட்சம் பேர் ரயில்வேயில் வேலை வாய்ப்பு பெற உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் ஓடும் 22 முக்கிய ரயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் பியூஸ் கோயல் கூறினார். 

மூலக்கதை