ஹரியானாவில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து... மீட்பு பணிகள் தீவிரம்

தினகரன்  தினகரன்
ஹரியானாவில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து... மீட்பு பணிகள் தீவிரம்

குருகிராம்: அரியானா மாநிலம், குருகிராம் பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 5-க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரியானா மாநிலம், குருகிராம் பகுதியில் 4 மாடிகள் கொண்ட கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், இக்கட்டிடம் இன்று அதிகாலை 5 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் 5 பேர் சிக்கியிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற காசியாபாத் மற்றும் துவாரகாவை சேர்ந்த 3 தேசிய பேரிடம் மீட்புப் படையினர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூலக்கதை