'நேட்டோ'விலிருந்து விலக டிரம்ப்க்கு எதிர்ப்பு

தினமலர்  தினமலர்
நேட்டோவிலிருந்து விலக டிரம்ப்க்கு எதிர்ப்பு

வாஷிங்டன், சர்வதேச ராணுவமான நேட்டோ படையில் இருந்து அமெரிக்கா விலகும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவுக்கு எதிராக பெரும்பான்மையான எம்.பி.,க்கள் வாக்களித்தனர்.இந்தியா உள்ளிட்ட 28 நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச ராணுவம் தான் நேட்டோ படை. பயங்கரவாதத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் அமைதியை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார்.இதுதொடர்பாக அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பில், 'நேட்டோ' அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகக் கூடாது என 357 உறுப்பினர்களும், விலகலாம் என 22 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.ஏற்கனவே மெக்சிகோ எல்லைச்சுவர் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் டிரம்பிற்கும் பிரதிநிதிகள் சபைக்கும் மோதல் நிலவும் சூழலில் இந்த தோல்வி அவருக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

மூலக்கதை