அதிபர் தேர்தலில் போட்டி: இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸூக்கு 24 மணி நேரத்தில் 15 லட்சம் டாலர் நன்கொடை

தினகரன்  தினகரன்
அதிபர் தேர்தலில் போட்டி: இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸூக்கு 24 மணி நேரத்தில் 15 லட்சம் டாலர் நன்கொடை

வாஷிங்டன்: அதிபர் வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த கமலா ஹாரிஸூக்கு 24 மணி நேரத்தில் 15 லட்சம் டாலர் நன்கொடை  கிடைத்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ். கலிபோர்னியாவிலிருந்து அமெரிக்கா நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்நிலையில் 2020-ம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில், போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக நேற்று  அறிவித்தார். இதன் மூலம் அதிபர் வேட்பாளர் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் 4-ம் இடத்தில் உள்ளார்.மூத்த வழக்கறிஞரும், எழுத்தாளருமான கமலா ஹாரிஸ்-க்கு குடியரசு கட்சியினர் மற்றும் அமெரிக்க மக்களிடையே மிகுந்த செல்வாக்கு உள்ளது. அமெரிக்க  அதிபராக உள்ள டொனல்டு டிரம்ப் மீண்டும் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால் அதிபர் வேட்பாளர் போட்டியில்  டிரம்ப்புடன் கமலா ஹாரிஸ் மோதவுள்ள சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த 24 மணி நேரத்தில் 15 லட்சம் டாலர் நன்கொடை  கிடைத்துள்ளது. அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் தான் இருப்பதாக கமலா அறிவித்த 12 மணி நேரத்தில் 10 லட்சம் அமெரிக்க டாலரையும், 24  மணி நேரத்தில் மொத்தமாக 15 லட்சம் அமெரிக்க டாலரையும் நன்கொடையாக பெற்றார்.சுமார் 38 ஆயிரம் பேர் கமலாவுக்கு நன்கொடைகள் வழங்கியுள்ளனர். “மக்களுக்காக கமலா ஹாரிஸ்” என்று அச்சிடப்பட்ட டிசர்ட், தொப்பி உள்ளிட்டவற்றின்  விற்பனை மூலம் கமலா ஹாரிஸ் ஒரு லட்சத்து 10 ஆயிரம் டாலர்களை திரட்டியுள்ளார். வரலாற்றிலேயே இந்திய அமெரிக்கர் ஒருவர் தேர்தலில் போட்டியிட 24  மணி நேரத்துக்குள் அதிக நிதி திரட்டியது இதுவே முதன் முறை எனக் கூறப்படுகிறது.

மூலக்கதை