வீட்டில் அனுமதிக்க உத்தரவிடக்கோரி சபரிமலையில் தரிசனம் செய்த கனகதுர்கா, நீதிமன்றத்தில் மனு

தமிழ் முரசு  தமிழ் முரசு
வீட்டில் அனுமதிக்க உத்தரவிடக்கோரி சபரிமலையில் தரிசனம் செய்த கனகதுர்கா, நீதிமன்றத்தில் மனு

திருவனந்தபுரம்; தனது வீட்டில் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று சபரிமலையில் தரிசனம் செய்த கனகதுர்கா, நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். சபரிமலையில் பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து பல பெண்கள், சாமி தரிசனம் செய்தனர். கனகதுர்கா, பிந்து ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்று தரிசனம் செய்தனர்.

இதன்பிறகு நீண்ட நாட்களாக போலீஸ் பாதுகாப்புடன் மறைவாக இருந்த பிந்து கடந்த இரு தினங்களுக்கு முன் வீட்டுக்கு திரும்பினார். அவருக்கு ஒரு சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் கனகதுர்காவும் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் வீட்டுக்கு திரும்பினார்.

ஆனால் அவரை அவரது கணவர் வீட்டில் ஏற்கவில்லை. அதோடு கனகதுர்காவின் பெற்றோரும் அவரை வீட்டில் ஏற்க மறுத்துவிட்டனர்.

இதையடுத்து அவர் பெரிந்தல் மன்னாவில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அங்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தன்னை வீட்டில் அனுமதிக்க உத்தரவிட ேகாரி கனகதுர்கா பெரிந்தல்மன்னா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

இம்மனு இந்த வாரம் விசாரணைக்கு வருகிறது.

.

மூலக்கதை