கேரள வெள்ளத்தில் மூழ்கி கெட்டுப்போன 100 லோடு அரிசி பறிமுதல்: திருச்சியில் அதிரடி ரெய்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கேரள வெள்ளத்தில் மூழ்கி கெட்டுப்போன 100 லோடு அரிசி பறிமுதல்: திருச்சியில் அதிரடி ரெய்டு

திருவனந்தபுரம்; கேரளாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ரூ. 30 ஆயிரம் கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டது.

ஏராளமான வீடுகள் இடிந்தன. விவசாய நிலங்கள் சேதமடைந்தன.

வெள்ளபெருக்கின்போது கேரள நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் விற்பனை செய்வதற்காக எர்ணாகுளம் பெரும்பாவூரில் உள்ள 2 அரிசி மில்களில் ைவக்கப்பட்டிருந்த 100 லோடுக்கு மேல் அரிசி மூட்டைகள் தண்ணீரில் மூழ்கி கெட்டுப்போனது. இந்த அரிசியை கால்நடைகளுக்கு கூட கொடுக்க கூடாது என்றும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த அரிசியை திருச்சியை சேர்ந்த சில தனியார் மில் உரிமையாளர்கள் வாங்கி சென்றனர்.

பின்னர் கெட்டுப்போன இந்த அரிசியை பட்டை தீட்டி மீண்டும் கேரள நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு விற்பனை செய்ய தயாராக வைத்திருப்பதாக தகவல் வெளியானது.

இதையடுத்து இதுதொடர்பாக விசாரணை நடத்த கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார்.

விசாரணையில், திருச்சி துறையூரில் உள்ள ஒரு அரிசி மில்லில் கெட்டுப்போன அரிசியை துப்புரவு செய்து கேரளாவுக்கு அனுப்ப தயாராக வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.   இதையடுத்து தமிழக குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரின் உதவியுடன், கேரள உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அந்த ஆலையில் திடீர் சோதனை நடத்தினர். இதில், 100 லோடு கெட்டுப்போன அரிசி துப்புரவு ெசய்த பட்டை தீட்டப்பட்டு தயாராக இருந்ததை கண்டுபிடித்தனர்.

அந்த அரிசி முழுவதும் கைப்பற்றப்பட்டது.

விலங்குகளுக்கு கூட கொடுக்க கூடாது என கேரள நீதிமன்றம் உத்தரவிட்ட கெட்டுப்போன அரிசியை பட்டை தீட்டி மீண்டும் விற்பனைக்கு அனுப்ப வைத்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

.

மூலக்கதை