மாணவர்களுக்கு தீயணைப்பு, மீட்பு ஒத்திகை

தமிழ் முரசு  தமிழ் முரசு
மாணவர்களுக்கு தீயணைப்பு, மீட்பு ஒத்திகை

செங்கல்பட்டு: காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவு துறை சார்பில், தீ விபத்தின்போது, ஆபத்து காலங்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது குறித்து நேற்று செங்கல்பட்டு நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு மீட்பு பணி அலுவலர் முரளி தலைமை தாங்கினார்.

இதில், துணை தலைவர் அப்துல் பாரி, செங்கல்பட்டு தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜசேகர் உட்பட 20 தீயணைப்பு வீரர்கள் கலந்துகொண்டனர்.

  பின்னர் பள்ளி மாணவர்களிடம் தீ விபத்தை கையாள்வது எப்படி, வீடு மற்றும் அலுவலவங்களில் ஏற்படும் தீயை அணைக்கும் முறை, தீக்காயம் அடைந்தவர்கள் மற்றும் பேரிடர் காலங்களில் மக்களை மீட்கும் முறை குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். மேலும், பொது இடங்களில் தீ விபத்து ஏற்பட்டால், யாருக்கு முதலில் தகவல் தெரிவிக்க வேண்டும்.

தீபாவளி உள்ளிட்ட பல்வேறு பண்டிகை காலங்களில் எவ்வாறு பாதுகாப்பாக செயல்படுவது என விளக்கி கூறினர்.

இதில் பள்ளி நிர்வாகி சகாயராஜ், செங்கல்பட்டு டவுன் போலீசார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

.

மூலக்கதை