தொடங்கியது 49வது உலக பொருளாதார மாநாடு : சர்வதேச பொருளாதாரம், பருவநிலை குறித்து விரிவாக விவாதம்

தினகரன்  தினகரன்
தொடங்கியது 49வது உலக பொருளாதார மாநாடு : சர்வதேச பொருளாதாரம், பருவநிலை குறித்து விரிவாக விவாதம்

பெர்ன் : சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் 49வது சர்வதேச பொருளாதார மாநாடு தொடங்கி இருக்கிறது. இந்த மாநாட்டின் பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. 4 நாட்கள் தொடர்ந்து நடைபெற இருக்கும் இந்த மாநாட்டின் முதல் நாளில் சர்வதேச பொருளாதாரம், பருவநிலை மாற்றம், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், தகவல் மேலாண்மை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. மாநாட்டில் சீனா முன்வைத்த சாலை வசதிகள், நிலையான வளர்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புகள் குறித்து விவகாரங்கள் உறுப்பு நாடுகளை வெகுவாக கவர்ந்தன. இதனிடையே இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் வர்த்தக, பொருளாதார அமைப்புகளில் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். நேற்று \'உலகமயமாக்கல் வடிவமைப்பு\' என்ற தலைப்பில் வறுமை ஒழிப்பில் உள்ள பிரச்னைகள் குறித்த கருத்தரங்கு நடந்தது.இதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல்அதிகாரியும், இந்தியருமான சத்யா நாதெள்ளா பேசியதாவது, \'அடுத்த கட்ட பொருளாதார வளர்ச்சி என்பது அனைத்து நாடுகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். உணவுக்கு தட்டுப்பாடு இல்லாத, அகதிகளே இல்லாத உலகை உருவாக்குவதே பொருளாதார வளர்ச்சியின் குறிக்கோளாக இருக்க வேண்டும். தொழில்நுட்பமும் தொழில்களும் இணைந்து செயல்பட வேண்டும். புதிய கண்டுபிடிப்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அனைத்து நாடுகளையும் இணைந்து வளர்வதே உண்மையான பொருளாதார வளர்ச்சி\', இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை