நேதாஜி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் பிரதமர்

தினமலர்  தினமலர்
நேதாஜி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் பிரதமர்

புதுடில்லி: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகத்தை இன்றுபிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.


சுதந்திர போராட்ட வீரரும் நேதாஜி என அழைக்கப்படுபவருமான சுபாஷ் சந்திர போஸ் நாட்டின் விடுதலைக்காக இந்திய தேசிய ராணுவத்தை நிறுவினார். அவரது 123-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவரது குழந்தை பருவம் துவங்கி, பல்வேறு வாழ்க்கை வரலாற்றை விளக்கும் அருங்காட்சியகம் புதுடில்லி செங்கோட்டையில் கட்டப்பட்டுள்ளது. இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி இன்று ( ஜன. 23) திறந்து வைக்கிறார்.

'' ஆசாத் கி தீவானே' என பெயரிடப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் சுதந்திர போராட்ட காலத்தை விளக்கும் ஓவியங்கள், அரியவகை புகைபடங்கள் வைக்கப்பட்டுள்ளன.

மூலக்கதை