அமெரிக்க அதிபர் 'கோதா'வில் கமலா ஹாரீஸ்

தினமலர்  தினமலர்
அமெரிக்க அதிபர் கோதாவில் கமலா ஹாரீஸ்

நியூயார்க்: 2020ம் ஆண்டு நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக 54 வயதான அமெரிக்க - இந்தியரான கமலா ஹாரீஸ் அறிவித்துள்ளார்.

சென்னை பெண் டாக்டரின் மகள்:



சென்னையை சேர்ந்த டாக்டர் ஷியாமளா கோபாலன், 1960ல் இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்றார். அங்கு, ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பொருளாதார பேராசிரியராக இருந்த கறுப்பர் இனத்தை சேர்ந்த ஹாரீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்தவர் தான் கமலா ஹாரீஸ்.

தற்போது ஜனநாயக கட்சியின் செனட்டராக இருக்கும், கமலா கலிபோர்னியா அட்டர்னி ஜெனராலாகவும் இருந்தவர். தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்பை கடுமையாக விமர்சித்து வருபவர்.
கலிபோர்னியாவில் இருந்து செனட்டுக்கு முதன்முறையாக 2016ல் தேர்வு செய்யப்பட்டவர் கமலா. இவரது வரவால், இந்தியவர்கள் உள்பட பல்வேறு இனத்தவர்கள், இளைஞர்கள் ஜனநாயக கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

''நீதி, நாகரீகம், சமத்துவம், சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவை தான் இப்போதைக்கு அமெரிக்கர்களுக்கு தேவை. அதற்காக நான் பாடுபடுவேன்'' என்கிறார் கமலா.ஏற்கனவே துளசி கப்பார்டு என்ற அமெரிக்க இந்திய பெண்ணும் அதிபர் போட்டியில் இருக்கிறார்.

மூலக்கதை