அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்: குடியரசு கட்சியில் டிரம்பிற்கு போட்டியாக கமலா ஹாரிஸ்

தினகரன்  தினகரன்
அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்: குடியரசு கட்சியில் டிரம்பிற்கு போட்டியாக கமலா ஹாரிஸ்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் போட்டிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது. கலிபோர்னியாவிலிருந்து அமெரிக்கா நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ், அதிபர் டிரம்ப் சார்ந்திருக்கும் குடியரசு கட்சியை சேர்ந்தவராவார். இவர் 2020-ம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் இதனை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மூத்த வழக்கறிஞரும், எழுத்தாளருமான கமலா ஹாரிஸ்-க்கு குடியரசு கட்சியினர் மற்றும் அமெரிக்க மக்களிடையே மிகுந்த செல்வாக்கு உள்ளது. அமெரிக்க அதிபராக உள்ள டொனல்டு டிரம்ப் மீண்டும் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால் அதிபர் வேட்பாளர் போட்டியில் டிரம்ப்புடன் கமலா ஹாரிஸ் மோதவுள்ள சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை