மேகதாது விவகாரம்: 4 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
மேகதாது விவகாரம்: 4 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு தாக்கல் செய்த பதில்மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உததரவிடப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் மத்திய அரசுக்கு 2 வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை  தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அளித்துள்ள அனுமதிக்கு தடை கோரி, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசு, மனுக்களைத் தாக்கல் செய்தன. மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் எதிராக, தமிழக அரசு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தொடர்ந்தது. அணை தொடர்பான, விரிவான திட்ட அறிக்கையை கடந்த 18-ஆம் தேதி மத்திய நீர் ஆணையத்தின் திட்ட ஆய்வு நிறுவனத்தின் தலைமைப் பொறியாளருக்கு, கர்நாடக நீர்வளத்துறையின் முதன்மைச் செயலாளர்அளித்தார். அதேபோல் உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது கர்நாடக அரசு தாக்கல் செய்த பதில்மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மூலக்கதை