ரோகித் சர்மாவுடனான உறவை அம்பலப்படுத்திய இங்கிலாந்து அழகி!

PARIS TAMIL  PARIS TAMIL
ரோகித் சர்மாவுடனான உறவை அம்பலப்படுத்திய இங்கிலாந்து அழகி!

இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா குறித்து தற்போது இங்கிலாந்து மொடல் அழகி செய்தி வெளியிட்டிருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 
இங்கிலாந்து மாடல் அழகி சோபியா ஹயாத், தனது வாழ்வு குறித்து ஒரு புத்தகம் எழுதி வருகிறார்.
 
அதில், அவர் இந்திய ஒருநாள் அணியின் துணைக்கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா குறித்து எழுதியுள்ளார்.
 
அதில், லண்டனில் உள்ள ஒரு கிளப்பில் ரோகித் சர்மாவை நான் சந்தித்தேன்.
 
ஆனால், நான் கிரிக்கெட் அதிக அளவில் பார்ப்பதில்லை என்பதால், உண்மையிலேயே அவர் பற்றி நான் அறியவில்லை. எப்படி இருந்தாலும், நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பேச ஆரம்பித்தோம்.
 
உடனடியான கிளப்பின் அமைதியான இடத்திற்கு நகர்ந்தோம். அந்த இடத்தில் இருந்து விரைவாக சென்றோம். ரோகித் சர்மா எனக்கு முத்தம் கொடுத்தார். அது அழகான தருணம். அதன்பிறகு நாங்கள் இருவரும் சேர்ந்து நடனமாடினோம்.
 
ரோகித் சர்மா மிகவும் சிறந்த நபர். நாங்கள் ஒருவருக்கொருவர் மிகவும் சந்தோசம் அடைந்தோம். சிறப்பாக நடிக்கவில்லை என்றால், ரசிகர்கள் எப்படி எதிர்வினையாற்றுவார்கள் என்பது குறித்து அதிக அளவில் பேசினோம். அவர் மிகவும் பாதுகாப்பானவர்.
 
அவர் என்னை ரசிகை என ஊடகங்களிடம் தெரிவித்ததால், மனமுடைந்து அவருடனான உறவை முறித்துவிட்டேன் என கூறியுள்ளார்.
 

மூலக்கதை