சீனாவில் அழகிய குட்டியை ஈன்ற வெள்ளை நிற பெலுகா திமிங்கலம்

தினகரன்  தினகரன்
சீனாவில் அழகிய குட்டியை ஈன்ற வெள்ளை நிற பெலுகா திமிங்கலம்

பெய்ஜிங்: சீனாவில் வெள்ளை நிற பெலுகா திமிங்கலம் குட்டி ஈன்ற காட்சிகள் வெளியாகி உள்ளது. இது பார்ப்போரை பரவசத்தில் ஆழ்த்தியது. குவாங்டாங் மாகாணத்தில் உள்ள மீன்கள் அருங்காட்சியகத்தில் பெலுகா வகை திமிங்கலங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதில் லினா என்ற பெண் திமிங்கலம் கர்ப்பமாக இருந்தது. இந்த திமிங்கலம் கடந்த சில நாட்களுக்கு முன் அழகிய பெண் குட்டியை ஈன்றது. 2 மணி நேர பேராட்டத்திற்கு பின் பெண் திமிங்கலம் இந்த குட்டியை ஈன்றது. குட்டி பிறக்கும் போது கரும் சாம்பல் நிறத்தில் இருந்தது. 8 வருடத்திற்கு பின் முழு வெள்ளை நிறத்தை அடையும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த காட்சி அருங்காட்சியக ஊழியர்களால் படம் பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ வெளியிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மூலக்கதை