அனுஷ்கா படத்தில் ஹாலிவுட் நடிகர் நடிப்பது உறுதியானது

தினமலர்  தினமலர்
அனுஷ்கா படத்தில் ஹாலிவுட் நடிகர் நடிப்பது உறுதியானது

ரெண்டு படத்திற்கு பிறகு மாதவன் - அனுஷ்கா இணைந்து நடிக்கும் படம் சைலன்ஸ். த்ரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்தில் அஞ்சலி, ஷாலினி பாண்டே ஆகியோரும் நடிக்கிறார்கள். ஹேமந்த் மதுக்கர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் அமெரிக்காவில் தொடங்குகிறது.

இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்ஸன் வில்லனாக நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், தற்போது அவருக்கு ரூ.3 கோடி அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இவர் தவிர இன்னும் சில ஹாலிவுட் நடிகர்கள் இந்த சைலன்ஸ் படத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

மூலக்கதை