தமிழ் ராக்கர்ஸிடம் விற்றுவிடுங்கள் : எஸ்.வி.சேகர்

தினமலர்  தினமலர்
தமிழ் ராக்கர்ஸிடம் விற்றுவிடுங்கள் : எஸ்.வி.சேகர்

சமீபகாலமாக எந்த புதிய படங்கள் வெளியானாலும் உடனடியாக தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளத்திலும் வெளியாகி விடுகிறது. சில படங்களை சவால் விட்டே அவர்கள் வெளியிட்டு வருகின்றனர். இதை தடுக்க தமிழக அரசின் துணையுடன் தயாரிப்பாளர் சங்கம் எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.

இந்நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர் இது குறித்து ஒரு கருத்து கூறியுள்ளார். அதாவது, படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் தமிழ் ராக்கர்ஸை குறை கூற முடியாது. இது விஞ்ஞானத்தின் வளர்ச்சி. அதனால் படம் எடுப்பவர்கள் தமிழ் ராக்கர்ஸிடம் படங்களை விற்று விடலாம் என்று கூறியுள்ளார்.

தமிழ் ராக்கர்ஸை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த சினிமாத்துறையினரும் முயற்சித்து வரும் நிலையில், அந்த இணையதளத்திற்கே படங்களை விற்க வேண்டும் என்று எஸ்.வி.சேகர் கூறியுள்ள இந்த கருத்து சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மூலக்கதை