கழிப்பறைக்கு சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

PARIS TAMIL  PARIS TAMIL
கழிப்பறைக்கு சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

 அவுஸ்திரேலியாவில் வெஸ்டன் கழிப்பறையில் இருந்து மலைப்பாம்பு வெளியில் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
பிரிஸ்பேனில் உள்ள ஒரு வீட்டின் கழிவறைக்கு அங்கு வசிக்கும் நபர் ஒருவர் சென்றுள்ளார்.
 
அப்போது உள்ளிருந்து ஒரு மலைப்பாம்பு வெளியில் வருவதை பார்த்து அதிர்ந்த அவர் குடும்பத்தாரை அழைத்தார்.
 
எல்லோரும் மலைப்பாம்பை பார்த்து பதறிய நிலையில் உடனடியாக பாம்பு பிடிக்கும் நபர்களுக்கு தகவல் கொடுத்தார்கள்.
 
சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் பாம்பை லாவகமாக பிடித்தனர்.
 
பாம்பானது கழிவுநீர் அமைப்பின் வழியாக உள்ளே வந்திருக்கலாம் என தெரிகிறது.
 
இது குறித்த புகைப்படங்கள் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதிகளவில் லைக்குகளை பெற்று வருவதோடு அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

மூலக்கதை