கொலம்பியாவில் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து பிரம்மாண்ட பேரணி.... ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

தினகரன்  தினகரன்
கொலம்பியாவில் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து பிரம்மாண்ட பேரணி.... ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கொலம்பியா: கொலம்பியாவில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்து நடைபெற்ற அமைதிப்பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். தலைநகர் போகோடாவில் உள்ள காவல்துறை பயிற்சி மையத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும் 68 பேர் படுகாயம் அடைந்தனர். 80 கிலோ வெடிபொருட்களை கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதால் அப்பகுதியில் பெரியளவில் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்து ஆயிரக்கணக்கானோர் அமைதிப்பேரணி நடத்தினர். வெள்ளை ஆடைகள் அணிந்தபடி கைகளில் வெள்ளை கொடிகள் மற்றும் பலூன்களுடன் ஊர்வலமாக வந்து தலைநகரில் உள்ள வரலாற்று சிறப்புவாய்ந்த பிளாசா லிபொலிவர் என்ற இடத்தில் உயிரிழந்தவர்களுக்காக மவுன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிராக கொலம்பியா ஒருங்கிணைந்து போராடும் என்று அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

மூலக்கதை