தடுத்து நிறுத்திய பாதுகாவலர்! பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட பெடரர்

PARIS TAMIL  PARIS TAMIL
தடுத்து நிறுத்திய பாதுகாவலர்! பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட பெடரர்

அடையாள அட்டை அணியாததால்  நடப்பு சம்பியனான ரோஜர் பெடரரை பாதுகாவலர் தடுத்து நிறுத்தினார்.

 
ஆவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடி வரும் பிரபல வீரரான ரோஜர் பெடரர் போட்டியில் பங்கேற்பதற்காக மைதானத்திற்கு சென்று கொண்டிருந்தபோது அவர் தனது அடையாள அட்டையை அணியாமல் சென்றுள்ளார்.
 
இதைக் கண்ட பாதுகாவலர் ரோஜர் பெடரரிடம் அடையாள அட்டையை காண்பிக்கும்படி கூறி அவரை தடுத்து நிறுத்தினார். உடனே பெடரர் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் தனது அணியினர் அடையாள அட்டையை கொண்டு வருவதாக கூறி சிறிது நேரம் அங்கு காத்திருந்தார். பின்னர் அடையாள அட்டையை காண்பிடித்துவிட்டு மைதானத்திற்குள் சென்றார்.
 
பிரபல வீரரான பெடரர் பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட விதத்தை இணைய தளத்தில் பலர் பாராட்டியுள்ளனர்.

மூலக்கதை