சிரியாவில் அத்துமீறி தாக்குதல் நடத்திய ஈரான்...... பதிலடி கொடுத்து எச்சரித்த இஸ்ரேல்

தினகரன்  தினகரன்
சிரியாவில் அத்துமீறி தாக்குதல் நடத்திய ஈரான்...... பதிலடி கொடுத்து எச்சரித்த இஸ்ரேல்

டமாஸ்கஸ்: சிரியாவில் ஈரான் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத்தளமான கோலன் ஹெய்ட்ஸ் என்ற மலைப்பகுதி, மீது சிரியாவில் இருந்து ஈரானிய படைகள் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தின. எனினும் ஏவுகணை இடைமறிப்பு மூலம் இந்த தாக்குதலை இஸ்ரேல் முறியடித்தது. இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிரியாவில் உள்ள ஈரானிய புரட்சிப்படைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. சுமார் 1 மணிநேரத்துக்கு தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டதால் வெடிச்சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. பதிலுக்கு ஈரான் படைகள் இடைமறித்து ஏவுகணைகள் மூலம் அந்த தாக்குதல்களை முறியடித்தது. அதேசமயம் தங்கள் நாட்டிற்குள் தாக்குதல் நடத்த முற்பட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. 

மூலக்கதை