அரசியல் எனக்கு வேண்டாம் : அஜித் பளீச்

தினமலர்  தினமலர்
அரசியல் எனக்கு வேண்டாம் : அஜித் பளீச்

ரசிகர்கள் பணியில் கவனம் செலுத்துங்கள். சட்டம் ஒழுங்கை பேணுவதும், கல்வியில் கவனம் செலுத்துவதும் எனது ரசிகர்கள் எனக்கு செய்யும் அன்பு. அரசியலில் மற்றவர்கள் கருத்தை என் மீது திணிக்க விட்டதுமில்லை. எனது ரசிகர்களிடமும் நான் எதிர்பார்க்கிறேன்.எனக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை எனவும். அரசியல் நிகழ்வுகளில் எனது பெயர் போட்டோ இடம் பெறக்கூடாது எனவும் ரசிகர்களுக்கு நடிகர் அஜித்குமார் அறிவுறுத்தியுள்ளார் .

நடிகர் அஜித்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சில அரசியல் நிகழ்வுகளுடன் எனது பெயரை சம்பந்தப்படுத்தி செய்திகள் வெளிவருகின்றன. எனக்கு நேரடியாகவோ, மறைமுகமாவோ அரசியல் ஈடுபாட்டில் ஆர்வம் கிடையாது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது போன்ற செய்திகள் எனக்கு அரசியல் ஆசை வந்துவிட்டதாக மக்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்திவிடும்.

அரசியலில் எனக்கு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உண்டு. அதை நான் யார் மீதும் திணிக்க விரும்பவில்லை. வரிசையில் நின்று ஓட்டளிப்பதே எனது அதிகபட்ச அரசியல் தொடர்பு. எனது ரசிகர்கள் தங்களது தனிப்பட்ட அரசியலுக்கு எனது பெயரையோ,புகைப்படத்தையோ பயன்படுத்த வேண்டாம். எனது திரைப்படங்களில் அரசியல் சாயம் வரக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவு தருமாறு ரசிகர்களை நான் நிர்பந்திக்கமாட்டேன்.

என்னுடைய தொழில் சினிமா மட்டுமே. அதனால் தான் நான் எனது இயக்கங்களை கலைத்தேன். நான்அரசியல் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவோ விரும்பவில்லை. ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மோதலில் ஈடுபட வேண்டாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் நடிகர் அஜித் கூறியுள்ளார்.

மூலக்கதை