மம்முட்டியை வரவேற்க தயாராகும் கார்த்திக் சுப்புராஜ்

தினமலர்  தினமலர்
மம்முட்டியை வரவேற்க தயாராகும் கார்த்திக் சுப்புராஜ்

இடைவெளி விட்டு படம் இயக்கினாலும் ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் படங்களாக இயக்கி வருபவர் இயக்குனர் ராம். தங்க மீன்கள், தரமணி என தரமான இடைவெளிவிட்டு தற்பொழுது பேரன்பு என்கிற படத்தை இயக்கியுள்ளார். பத்து வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறார் நடிகர் மம்முட்டி.

ஏற்கனவே பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல விருதுகளை இந்த படம் வென்றுள்ளது அதுமட்டுமல்ல தமிழ் திரையுலகத்தை சேர்ந்த பல இயக்குனர்கள் நடிகர்களையும் இந்த படம் மிகவும் எதிர்பார்க்க வைத்துள்ளது. வரும் பிப்-1ஆம் தேதி இந்தப்படம் வெளியாகவுள்ளது.

இந்தநிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பேரன்பு படத்தை பார்க்க ஆவலாக இருப்பதாகவும், பத்து வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு வரும் இந்திய சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான மம்முட்டியை வரவேற்க தயாராக இருப்போம் என்றும் வரவேற்பு செய்தி ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மூலக்கதை