கைகள் இன்றி பிறக்கும் குழந்தைகள்! - மூன்று புதிய சம்பவங்கள்! - நீடிக்கும் மர்மம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
கைகள் இன்றி பிறக்கும் குழந்தைகள்!  மூன்று புதிய சம்பவங்கள்!  நீடிக்கும் மர்மம்!!

கிராமம் ஒன்றில் குழந்தைகள் கைகள் இன்றி பிறக்கின்றன என முன்னர் செய்தி ஒன்று வெளியிட்டிருந்தோம். இந்த மர்ம நிகழ்வு தற்போதும் தொடர்கின்றது. 
 
Ain, Morbihan அல்லது Loire-Atlantique ஆகிய நகரங்களை சுற்றி இந்த நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில்  Bouches-du-Rhône பகுதியில் தற்போது இதேபோன்றதொரு மேலதிக மூன்று சம்பவங்கள் கண்டுபிடிக்கபப்ட்டுள்ளன. Vitrolles எனும் நகரை சுற்றிய 30 கி.மீ தூரத்துக்கு இடைப்பட்ட  கிராமங்களில் கடந்த 2016 ஆம் ஆண்டின் ஜூன், ஓகஸ்ட், நவம்பர் ஆகிய மாதங்களில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. மூன்றுமே இரண்டு கைகளும் அற்ற குழந்தைகளாக பிறந்துள்ளன. 
 
அப்பிராந்தியத்தைச் சேர்ந்த தொற்றுநோய்களுக்கான சிறப்பு மருத்துவர் Emmanuel Amar இந்த புதிய தகவல்களை அறிந்துகொண்டுள்ளார். <<சுகாதார அமைச்சுக்கு இத்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன>> என அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
பிரான்சில் உடல் ஊனமுற்ற குழந்தைகள் ஒவ்வொரு 10,000 குழந்தைகளுக்கும் 1.7 எனும் கணக்குப்படி, அல்லது வருடத்துக்கு 150 எனும் கணக்கில் பிறக்கின்றன. ஆனால் குறிபபக இந்த சிறு பிராந்தியங்களில் இரு கைகளும் இன்றி பிறக்கும் குழந்தைகளின் படியல் ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட நிலையில் இருக்கும் போது, தற்போது இந்த புதிய மூன்று வழக்குகள் மேலும் அதிர்ச்சியை அதிகரித்துள்ளன

மூலக்கதை