பாரதிய ஜனதா கட்சி ஆட்சியிலிருந்து 100 நாட்களில் மக்களுக்கு விடுதலை கிடைக்கும்: ராகுல் காந்தி டுவிட்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாரதிய ஜனதா கட்சி ஆட்சியிலிருந்து 100 நாட்களில் மக்களுக்கு விடுதலை கிடைக்கும்: ராகுல் காந்தி டுவிட்

சென்னை: பிஜேபி ஆட்சியிலிருந்து 100 நாட்களில் மக்களுக்கு விடுதலை கிடைக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமாகிய மம்தா பானர்ஜி ஒருங்கிணைப்பில் 20க்கும் மேற்பட்ட எதிர் கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட மாபெரும்  பொதுக் கூட்டம் கடந்த 19ம் ேததி மேற்கு வங்க மாநிலம் ெகால்கத்தாவில் நடைபெற்றது.

இந்த கூட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, ‘இந்தக் கூட்டம் பொது மக்களுக்கு எதிரான கூட்டம். ஊழலுக்கு எதிரான தனது நடவடிக்கையில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ளவே அரசியல் எதிரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

இது ஊழலின் கூட்டணி. எதிர் கட்சிகளிடம் பண  பலம் இருக்கிறது.

எங்களிடம் மக்களின் பலம் இருக்கிறது’  என்றார்.

இதற்கு டுவிட்டரில் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

அதில், ‘இந்தியாவில் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். விவசாயிகள் பெரும் துயரத்தில் உள்ளனர்.

சிறுபான்மை மக்கள் மற்றும் ஆதிவாசிகள் துன்புறுத்தப்படுகின்றனர். தொழில் செய்ய முடியாமல் சிறு வணிகர்கள் தவித்துவருகின்றனர்.

எனவே இவர்கள் அனைவரும் உங்கள் ஆட்சியிலிருந்து விடுதலை வேண்டும் என்று விரும்புகின்றனர். அடுத்த 100 நாட்களில் அவர்களுக்கு விடுதலை கிடைக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

இதைத் தவிர்த்து பிரதமரின் கருத்துக்கு பதிலளித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி, பா. ஜ. க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு “துக்பந்தன்” கூட்டணி என்றும் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களால் அந்த கூட்டணி  நிராகரிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

.

மூலக்கதை