2018-19ல் இந்தியாவில் உள்ள பணக்காரர்களின் சொத்து மதிப்பு 28,00,000 கோடி அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
201819ல் இந்தியாவில் உள்ள பணக்காரர்களின் சொத்து மதிப்பு 28,00,000 கோடி அதிகரிப்பு

டெல்லி: இந்தியாவில் உள்ள மொத்த பணக்காரர்களின் சொத்துமதிப்பு 2018-19ம் நிதியாண்டின் மத்திய பட்ஜெட்டை விட அதிகம் என ஆய்வறிக்கையில்  தெரியவந்துள்ளது. ஆக்ஸ்ஃபாம் என்ற நிறுவனம் இது தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் 2018-19-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்  மதிப்பு சுமார் 24,42,200 கோடி ரூபாய் என்றும் ஆனால், இந்தியாவில் உள்ள பணக்காரர்களின் சொத்து மதிப்பு 28,00,000 கோடி ரூபாய் அதிகரித்துள்ளதாக  தெரிவித்துள்ளது.கடந்த 2018-ம் ஆண்டில் கோடீஸ்வரர்கள் பட்டியலுக்குள் மேலும் 18 பேர் வந்துள்ளதாகவும், எனவே கோடீஸ்வரர்கள் 119 பேராக அதிகரித்துள்ளதாகவும்  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டில் நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களின் சொத்து மதிப்பு நாளொன்றுக்கு ரூ.2,200 கோடி  அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 1% உள்ள நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களின் சொத்து மதிப்பு 2018-ம் ஆண்டில் 39% அதிகரித்துள்ளது.  குறிப்பாக இந்தியாவின் பொது சுகாதாரத்திற்கான மொத்த வரவு, செலவு முகேஷ் அம்பானியின் 2,80,000 கோடி சொத்து மதிப்பைவிட குறைவு என ஆக்ஸ்ஃபாம்  நிறுவனம் கூறியுள்ளது.இந்தியாவின் மொத்த சொத்து மதிப்பில் சுமார் 77.4% அளவிற்கான சொத்து 10 பேரிடம் மட்டுமே உள்ளதாகவும், அதே நேரம், அடித்தட்டு மக்களில் பாதிக்கும்  மேல் உள்ளவரிகளின் சொத்து மதிப்பு 3% மட்டுமே அதிகரித்துள்ளதாக ஆக்ஸ்ஃபாம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை