எனக்கா ரெட் கார்டு : தயாரிப்பாளர் சங்கத்தை பாட்டில் மிரட்டும் சிம்பு

தினமலர்  தினமலர்
எனக்கா ரெட் கார்டு : தயாரிப்பாளர் சங்கத்தை பாட்டில் மிரட்டும் சிம்பு

சிம்பு நடித்த, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்தார். இந்த படத்தில் சிம்பு தலையீட்டாலும், சரியான ஒத்துழைப்பு கொடுக்காததாலும் தனக்கு 20 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக தயாரிப்பளர் சங்கத்தில் புகார் அளித்தார்.

இந்த புகார் குறித்த விசாரணைக்கு சிம்பு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதனால் தயாரிப்பாளர் சங்கம் சிம்புக்கு ரெட் கார்ட் போட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை தயாரிப்பாளர் சங்கம் முறைப்படி அறிவிக்கவில்லை. அந்த நேரத்தில் "எனக்கா ரெட் கார்டு எடுத்துப்பாரு என் ரெக்கார்டு" என்று அறிக்கை விட்டார்.

மூலக்கதை