ஜி.வி.பிரகாஷ் ஜோடி ஆனார் ரைசா வில்சன்

தினமலர்  தினமலர்
ஜி.வி.பிரகாஷ் ஜோடி ஆனார் ரைசா வில்சன்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் துணை நடிகையாக இருந்த ரைசா வில்சன், யுவன் ஷங்கர் ராஜா தயாரித்த பியார் பிரேமா காதல் படம் மூலம் ஹீரோயினானார். அந்தப்படம் ஹிட்டாக மீண்டும் யுவனின் தயாரிப்பில் ஆலிஸ் படத்தில் நடிப்பவர், அடுத்து ஜி.வி.பிரகாஷ் ஜோடியாகி உள்ளார்.

குறும்படங்களின் மூலம் பிரபலமான கமல் பிரகாஷ் இயக்கும் படத்தில் ஜி.வி.பிரகாஷ், ரைசா நடிக்கிறார்கள். ஆரா சினிமா தயாரிக்கிறது. டிக் டிக் டிக் படத்தின் ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் துவக்க விழா மற்றும் பூஜை நேற்று நடந்தது. படம் பற்றி இயக்குனர் கமல் பிரகாஷ் கூறியதாவது:

இது ஒரு ஹாரர் பேண்டசி படம். பியார் பிரேமா காதல் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாகவே மாறி போன ரைசா இந்த படத்தின் கதையை கேட்ட மாத்திரத்தில் உற்சாகத்தில் துள்ளி குதித்தார். ஜி.வி.பிரகாஷ் நடிப்பதோடு, இசை அமைக்கவும் ஒப்புக் கொண்டார். திறமையான நடிக நடிகையர், தொழில் நுட்ப கலைஞர்கள் என என் திரை பயணம் துவங்குகிறது. படத்துக்கு பொருத்தமான டைட்டிலை தேடிக் கொண்டு இருக்கிறோம் . விரைவில் படப்பிடிப்பை துவங்க உள்ளோம் என்கிறார் இயக்குநர் கமல் பிரகாஷ்.

மூலக்கதை