பிரிட்டனில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட ஸ்டராபியர் திருவிழா

தினகரன்  தினகரன்
பிரிட்டனில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட ஸ்டராபியர் திருவிழா

விட்டெல்சி: பிரிட்டனில் அறுவடை திருவிழாவின் ஒருபகுதியாக ஸ்டராபியர் என்ற பாரம்பரிய திருவிழா கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் இந்த விழாவில் மக்கள் வைக்கோல் ஆடை அணிந்து சாலைகளில் ஊர்வலமாக சென்றனர். விட்டெல்சி நகரில் மேளதாளங்கள் முழங்க வினோதமான உடையணிந்து ஊர்வலமாக சென்றவர்கள் பொதுமக்களுக்கு பரிசுகளை வழங்கினர். 1882-ம் ஆண்டில் இருந்து இந்த விழா கொண்டாடப்படுவதாகவும், இது பாரம்பரிய அறுவடை திருவிழாவாக பார்க்கப்படுவதாகவும் அந்நாட்டு மக்கள் தெரிவித்தனர். இந்த விழாவை காண ஏராளமான மக்கள் திரண்டதால் விட்டெல்சி நகரம் விழாக்கோலம் பூண்டது. வீதிகளில் வினோதமான வைக்கோல் உடையணிந்து நடனமாடியபடி சென்றவர்கள் காண்போரை பரவசப்படுத்தினர். 

மூலக்கதை