சபரிமலையில் தரிசித்த பிந்து வீடு திரும்பினார் எஸ்ஐ தலைமையில் 5 போலீசார் பாதுகாப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சபரிமலையில் தரிசித்த பிந்து வீடு திரும்பினார் எஸ்ஐ தலைமையில் 5 போலீசார் பாதுகாப்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் தரிசனம் செய்த பிறகு, ரகசிய இடத்தில் இருந்த பிந்து நேற்று இரவு திடீரென அவரது வீட்டிற்கு திரும்பினார். இதையடுத்து அவரது வீட்டிற்கு ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் கோழிக்கோடு கொயிலாண்டியை சேர்ந்த பிந்து மற்றும் மலப்புரம் பெரிந்தல்மண்ணாவை சேர்ந்த கனகதுர்கா ஆகிய 2 பெண்களும் கடந்த 2ம் ேததி சபரிமலையில் தரிசனம் செய்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதையடுத்து கேரளாவில் வரலாறு காணாத கலவரம் வெடித்தது.

இவர்கள் சபரிமலை சென்ற மறுநாள் (3ம் தேதி) கேரளாவில் பாஜ மற்றும் இந்து அமைப்பினர் சார்பில் பந்த் நடத்தப்பட்டது. இதற்கிடையே சபரிமலை சென்ற பின்னர் பிந்து மற்றும் கனகதுர்காவுக்கு கடும் மிரட்டல் வந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் ரகசிய இடத்தில் தங்க வைத்திருந்தனர். இவர்களது வீடுகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே தங்களுக்கு முழு நேர பாதுகாப்பு வழங்க கோரி இருவரும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உசுசநீதிமன்றம் இருவருக்கும் பாதுகாப்பு அளிக்க கேரள அரசுக்கு உத்தரவிட்டது.

தொடர்ந்து இருவருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த வாரம் கனகதுர்கா தனது கணவர் வீட்டிற்கு சென்றார்.



அப்போது கணவர் மற்றும் உறவினர்கள் அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர்களிடையே மோதல் ஏற்பட்டது.

இதில் மாமியார் தன்னை தாக்கியதாக கனகதுர்கா கூறினார். பின்னர் அவர் பெரிந்தல்மண்ணாவில் உள்ள அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதேபோல் கனகதுர்கா தன்னை தாக்கியதாக கூறி மாமியார் சுமதியும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுதொடர்பாக இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

கனகதுர்கா இதுவரை வீடு திரும்பவில்லை. தற்ேபாதும் மருத்துவமனையிலேயே உள்ளார்.

இந்த நிலையில் பிந்து நேற்று இரவு கொயிலாண்டியில் உள்ள தனது கணவர் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்றார். அவரது வீட்டில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிந்து கண்ணூர் பல்கலை கழகத்தில் சட்டத்துறையிலும், கனகதுர்கா கேர ள நுகர்பொருள் வாணிப துறையில் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை