பிஜேபி - பிடிபி ஆட்சிதான் காஷ்மீரின் மோசமான காலம்: முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா குற்றச்சாட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிஜேபி  பிடிபி ஆட்சிதான் காஷ்மீரின் மோசமான காலம்: முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா குற்றச்சாட்டு

கொல்கத்தா: பிஜேபி-பிடிபி ஆட்சி செய்த காலம்தான் காஷ்மீரின் மோசமான காலம் என்று முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தெரிவித்தார். கொல்கத்தாவில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வில் கலந்து கொண்ட காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா கூறியதாவது: மெகபூபா முப்தி தலைமையில் நடந்த பிஜேபி மற்றும் பிடிபி கூட்டணி ஆட்சிதான் காஷ்மீரின் மிக மோசமான காலம்.

இந்த காலக் கட்டத்தில் இந்து மற்றும் முஸ்லீம் மக்கள்  மோசமான நிலைக்கு சென்றுவிட்டனர். காஷ்மீர் மக்கள் நம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டும்.

நாம் நாட்டின் கடினமான காலத்தை கடந்து சென்று கொண்டு இருக்கிறோம். நீங்கள் இன்றைய தினம் பிரார்த்தனை செய்யும் போது உங்களுக்காவும், நாட்டுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்.



நாட்டின் ஒற்றுமைக்காகவும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். மத நல்லிணக்கதுடன் அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும்.

அதற்காக அனைவரும் உழைக்க வேண்டும். யாரும் எதிர்பார்க்காத நிலையில் கடந்த 2015ம் ஆண்டு மோடி பாகிஸ்தான் சென்றார்.

ஆனால் இந்த பயணம் இரு நாடுகளுக்கு இடையே சமாதானப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல தவறிவிட்டது. இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்ைத தொடர்ந்து நடைபெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை