ஸ்டீல் மேன் ஆப் தமிழ்நாடு 2019 ஆணழகன் போட்டியில் ₹5 லட்சம் வெல்லப்போவது யார்?: இரா.மனோகர் அறிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஸ்டீல் மேன் ஆப் தமிழ்நாடு 2019 ஆணழகன் போட்டியில் ₹5 லட்சம் வெல்லப்போவது யார்?: இரா.மனோகர் அறிக்கை

சென்னை: தமிழ்நாடு மாநில அமெச்சூர் ஆணழகன் மற்றும் உடற்தகுதி சங்க தலைவர் இரா. மனோகர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 4 ஆண்டுகளாக ‘ஸ்டீல் மேன் ஆப் தமிழ்நாடு’ என்ற ஆணழகன் போட்டி தமிழ்நாடு மாநில அமெச்சூர் ஆணழகன் மற்றும் உடற்தகுதி சங்கத்தின் தலைவரான எனது தலைமையில் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. ‘சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ்’ பட்டம் வென்றவர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

இதன் 5வது ஆண்டுக்கான ‘ஸ்டீல் மேன் ஆப் தமிழ்நாடு’ போட்டி எனது தலைமையில் வரும் 27ம்தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது.   இப்போட்டி எடை அடிப்படை பிரிகளிலும், உடலமைப்பு பிரிவுகளிலும், 40 வயதை கடந்த வீரர்களின் பிரிவுகளிலும் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளடங்கிய 16 பிரிவுகளிலும் நடத்தப்பட்டு மொத்தம் ரூ. 7. 75 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு எடைப்பிரிவிலும் முதலிடம் பிடிப்பவர்களுக்கு ரூ. 25ஆயிரமும், 2வது இடம் பிடிப்பவருக்கு ரூ. 15ஆயிரமும், 3வது இடம் பிடிப்பவருக்கு ரூ. 10 ஆயிரமும் வழங்கப்படுகிறது.



ஒவ்வொரு பிரிவிலும் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரர்களை சேர்த்து அவர்களுக்கு தனியாக ஒரு ஆணழகன் போட்டி நடத்தி அதில் முதலிடம் பிடிக்கும் ‘சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ்’ வீரருக்கு ரூ. 5 லட்சம் பரிசும் மற்றும் ‘ஸ்டீல் மேன் ஆப் தமிழ்நாடு 2019’ விருதும் வழங்கப்படுகிறது. ஆக மொத்தம் இந்த போட்டியில் பரிசுத் தொகையாக மட்டும் ரூ. 12. 75 லட்சம் வழங்கப்படுகிறது.

இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை எனது தலைமையில், சண்முகா டிரான்ஸ்போர்ட் செயல் இயக்குனர் எம். புஷ்பராஜ், தமிழ்நாடு மாநில அமெச்சூர் ஆணழகன் மற்றும் உடற்தகுதி சங்க செயலாளர் டி. கே. குருநாதன், துணை தலைவர் ஜிம் ஜெ. பாபு, பொருளாளர் னிவாசராகவன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இப்போட்டியின் பரிசளிப்பு விழாவுக்கு தமிழக முன்னணி நட்சத்திர நடிகர்கள் வருகை தர இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


.

மூலக்கதை