வேலூர் மத்திய சிறையில் முருகன் உண்ணாவிரதம் திடீர் வாபஸ்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வேலூர் மத்திய சிறையில் முருகன் உண்ணாவிரதம் திடீர் வாபஸ்

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். 27 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், நளினி மற்றும் பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதன்படி, தமிழக அரசின் பரிந்துரை மீது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் கடந்த 19ம்தேதி காலை பெண்கள் சிறையில் உள்ள நளிளியை, சந்தித்த முருகன், உண்ணாவிரதம் இருப்பதற்கான மனுவை அளித்துவிட்டு அன்று காலை முதல் உண்ணாவிரத்தை தொடங்கினார்.

2வது நாளாக நேற்றும் உண்ணாவிரதம் இருந்த முருகனிடம், சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள் பேச்சுவார்த்தை நடத்தினார்.
‘உங்களது கோரிக்கையை அரசுக்கு தெரிவிப்பதாக அவர் உறுதியளித்தார். இதையடுத்து முருகன், பால் அருந்தி உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

இதற்கிடையில் முருகனை சந்திக்க அவரது வழக்கறிஞர் புகழேந்தி வேலூர் சிறைக்கு இன்று வருகிறார். அப்போது விடுதலை செய்யக்கோரி புதிய மனு கோர்ட்டில் தாக்கல் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


.

மூலக்கதை