அரசு பஸ்சில் பேட்ட படம்

தினமலர்  தினமலர்
அரசு பஸ்சில் பேட்ட படம்

பொங்கல் திருநாளை முன்னிட்டு கடந்த 10ம் தேதி ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் படங்கள் வெளியாகின. இரண்டு படங்களுக்கும் ரசிகர்களிடத்தில் ஆதரவு கிடைத்திருக்கிறது. அதேசமயம் படங்கள் வெளியான அன்றே இரண்டு படங்களும் இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சி தந்தன.

இந்நிலையில் பேட்ட படம் இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து அரசு பஸ்சில் ஒளிப்பரப்பானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை அந்த பஸ்சில் பயணித்த பயணி ஒருவர், செல்போனில் படம் பிடித்து, பஸ் எண், எந்த வழித்தடங்களில் செல்கிறது என்ற விபரத்தை இணையதளங்களில் வெளியிட்டார். இதனால் ரசிகர்களும், திரையுலகினரும் கண்டனங்களை தெரிவித்தனர்.

இதுப்பற்றி விஷால் டுவிட்டரில் கூறியிருப்பதாவது : அரசு பஸ்சில் திருட்டுத்தனமாக படங்கள் ஒளிப்பரப்புவது இதன்மூலம் நிரூபணமாகி உள்ளது. அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் என பதிவிட்டு, அந்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

மூலக்கதை