ஸ்ரீதேவி பங்களாவில் நிறைய ரகசியங்கள் உள்ளன : இயக்குநர்

தினமலர்  தினமலர்
ஸ்ரீதேவி பங்களாவில் நிறைய ரகசியங்கள் உள்ளன : இயக்குநர்

கண்சிமிட்டல் மூலம் நாடு முழுக்க பிரபலமான நடிகை பிரியா பிரகாஷ் வாரியர், ஹிந்தியில் நடித்துள்ள படம் ஸ்ரீதேவி பங்களா. சமீபத்தில் இதன் டீசர் வெளியானது. அதில் இடம்பெற்ற காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தின. குறிப்பாக படத்தில் நடிகையாக வரும் பிரியா, குளியல் தொட்டியில் விழுந்து கிடப்பது, மறைந்த நடிகை ஸ்ரீதேவியை பிரதிபலிப்பது போன்று இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரும் எதிர்ப்பு தெரிவித்தார். விரைவில் வழக்கும் தொடர உள்ளார்.

இதுப்பற்றி இயக்குநர் பிரசாந்த் மாம்புலி கூறியிருப்பதாவது : ஒரு நடிகையின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப்படத்தை எடுத்துள்ளோம். கங்கனாவை நடிக்க வைக்க எண்ணினோம், அவர் கால்ஷீட் கிடைக்காததால் பிரியா வாரியரை நடிக்க வைத்தோம். ஒரு நடிகை லண்டனுக்கு செல்கிறார், அங்கு நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை.

ஸ்ரீதேவி பெயரை பயன்படுத்தக் கூடாது என்று போனி கபூர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். பெயரை மாற்ற மாட்டேன் என கூறிவிட்டேன், ஆனால் அவரிடம் பதில் இல்லை. படத்தில் நிறைய ரகசியங்கள் உள்ளன. படம் பார்த்த பிறகு ஸ்ரீதேவி வாழ்க்கை கதையா என்பதை அனைவரும் முடிவு செய்யட்டும். ஸ்ரீதேவியை மதிக்கிறேன், கண்டிப்பாக அவரை தவறாக சித்தரிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.

மூலக்கதை