சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்த பெண்கள் பட்டியலில் குளறுபடி.... புதிய பட்டியலை தயாரிக்க கேரள அரசு முடிவு

தினகரன்  தினகரன்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்த பெண்கள் பட்டியலில் குளறுபடி.... புதிய பட்டியலை தயாரிக்க கேரள அரசு முடிவு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்த பெண்கள் பட்டியலில் நிறைய தவறுகள் இருந்ததால் புதிய பட்டியலை தயாரிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கேரளாவிலுள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 - 50 வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருந்தது.  இந்த தீர்ப்புக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்த போடட்டங்களுக்கு இடையே கேரளாவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் பாதுகாப்பு கேட்டு இந்த பெண்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது சபரிமலையில் 51 பெண்கள் தரிசனம் செய்ததாக கேரளா அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் பட்டியல் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட  பட்டியலில் பல குளறுபடிகள் இருந்த்துள்ளது.  அதில் சில பெண்களின் வயது குறைத்து காட்டப்பட்டதாகக் தகவல் வெளியாகியுள்ளது. இதனால்  சபரிமலையில் தரிசனம் செய்த பெண்கள் பட்டியலில் திருத்தங்கள் செய்து புதிய பட்டியல் தயாரிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. மகர விளக்கு பூஜைகளுக்கு பிறகு நேற்று காலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்பட்டது. மாசிமாத பூஜைகளுக்காக மீண்டும் அடுத்த மாதம் 12-ம் தேதி நடை  திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை