பரிஸ் - கருக்கலைப்புக்கு எதிராக பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிஸ்  கருக்கலைப்புக்கு எதிராக பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்!!

சனிக்கிழமை மஞ்சள் மேலங்கி போராளிகள் பரிசை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை கருக்கலைப்புக்கு எதிராக சில ஆயிரம் வரையான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 
வாழ்க்கைக்கான நடைபயணம் (marche pour la vie) எனும் தலைப்பில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 13 ஆவது கட்ட முன்னெடுப்பு இது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 50,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக ஆர்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். அதேவேளை, 7,400 பேர் மாத்திரமே கலந்துகொண்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு புகைபப்டங்கள், கருத்துக்கள், தகவல்கள் தாங்கிய பதாதைகளை கைகளில் பிடித்தவாறு அவர்கள் ஆர்பபட்டத்தில் ஈடுபட்டனர். 
 
2017 ஆம் ஆண்டில் பிரான்சில் 216,700 கருக்கலைப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2001 ஆம் ஆண்டில் இருந்து இதே அளவான கருக்கலைப்பு வீதம் நீடித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை